விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தனியர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள வடகரை கிராமத்தில் செய்யல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை, வேலை தொடங்கிய போது பட்டாசுகள் இடையே உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
இதில் வேலை செய்து கொண்டிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் தீயணைப்புதுறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
வெடிவிபத்து குறித்து அருப்புகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் போர்மேன் மற்றும் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் ராஜா சந்திரசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.