கூடலூர், நவ.9: சர்வதேச கராத்தே போட்டிகளில் பதக்கங்கள் வென்ற கூடலூர் பகுதி அரசு தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அண்ணா உள் விளையாட்டு அரங்கில் ஒக்கினாவா கோஜிரியூ ஓபன் உலக கராத்தே போட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மலேசியா கிராண்ட் மாஸ்டர் ஆனந்தன் கலந்து கொண்டார். இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஸ்ரீலங்கா ஆகிய நான்கு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டிகளில் கூடலூர் பகுதி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவர்கள் 8 தங்கம் 19 வெள்ளி மற்றும் 26 வெண்கல பதக்கங்களை பெற்றனர். சென்பு காய் சிடோரியூ கராத்தே பயிற்சி பள்ளியில் பயின்று பதக்கங்கள் பெற்று தாங்கள் பயின்று வரும் பள்ளிக்கும் கூடலூர் பகுதிக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவ-மாணவிகள் மற்றும் கராத்தே பயிற்சியாளர் பாபு ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.