*மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்
கறம்பக்குடி : கறம்பக்குடி அருகே தனியார் பள்ளி வேன் ஒன்று சாலையோரம் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பந்துவக்கோட்டை ஊராட்சியில் கே.கே பட்டி கிராமத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு சொந்தமான வேன்கள் தினம் தோறும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி முடிந்த பிறகு பந்துவக்கோட்டை புது விடுதி வழியாக காடம்பட்டி கிராமத்திற்கு பள்ளி வேன் ஒன்று மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டிருந்தது. அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையாரத்தில் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வேனில் சிக்கிய மாணவர்களை மீட்டனர். இதில் ஒரே ஒரு மாணவருக்கு மட்டும் லேசானா சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது.
மற்ற மாணவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இது பற்றிய தகவல் கிடைத்தம் பெற்றோர்கள் பதறியடித்தபடி விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். இது குறித்து ரெகுநாதபுரம் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.