வெள்ளை காராமணி – ஒரு கப்
வெல்லம் – அரை கப்
நெய் – 2 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் – 3 மேசைக்கரண்டி.
செய்முறை
வெள்ளை காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவைத்து எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, காராமணியைச் சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும். காராமணி இனிப்பு சுண்டல் தயார்.