கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரி உள்ளது. இங்கு, 40 வயது மதிக்க தகுந்த பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டநிலையில் நேற்று முன்தினம் இரவு நிர்வாண கோலத்தில் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில், கூடுவாஞ்சேரி போலீஸ் எஸ்ஐ தனசேகர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர், அப்பகுதியில் உள்ள, அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ஹைதர்அலி, பொருளாளர் சுமதி உரிமைநாதன் மற்றும் சமூக ஆர்வலர்கள் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடையை அணிவித்து உணவு அளித்தனர். இதனை அடுத்து, தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மீட்டு, சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அன்று இரவு அழைத்து சென்று சேர்த்தனர்.