காரைக்குடி: காரைக்குடி கோயில் திருவிழாவில் பக்தர்கள் உடலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நா.புதூர் வீரையன் கண்மாய் நாகலிங்கம் தெருவில் ராமலிங்க சவுண்டேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு கடந்த 20ம் தேதி காப்புக்கட்டுதலுடன் 101ம் ஆண்டு சக்தி கரக மகோத்சவ பொங்கல் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து 26ம் தேதி புனித நீராடல், 27ம் தேதி பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். இதையொட்டி சக்தி கரகம் கோவிலுக்கு வந்து ரத்தி சேர்த்தல் என்னும் கத்தி போடுதல் நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது.
முத்தாலம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம் நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் வந்து பாப்பா ஊருணி பகுதியில் உள்ள கோயிலை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்கள் தங்களது உடலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து இரவு முளைப்பாரி அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று காலை 5 மணிக்கு கரகம், முளைப்பாரியை செஞ்சை ஊரணியில் கரைத்தல், காலை 6 மணிக்கு கோவிலில் மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.