கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி செல்வத்தை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். ரவுடி செல்வத்தை தேரூர் பகுதியில் வைத்து போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். போலீசாரை தாக்கிவிட்டு ரவுடி செல்வம் தப்ப முயன்ற போது காவல் ஆய்வாளர் ஆதாம் அலி சுட்டுப்பிடித்தார்.