நாகர்கோவில்: கன்னியாகுமரியில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள அறை ஒன்றில் பஸ்சின் பழைய சீட்டுகள் மற்றும் பொருட்கள் போடப்படும். இந்த அறையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென்று பரவியதையடுத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதை கண்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் தீயணைப்பு துறையினத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவம் நடைபெற்ற பகுதியில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.இரு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் அறையில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்த நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள உணவகத்தில் தீ பரவி பொருட்கள் சேதமடைந்தது. காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் டெப்போவில் தீவிபத்து ஏற்பட்டதா? ஓட்டலில் ஏற்பட்டதா? தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.