கன்னியாகுமரி : கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் இரண்டு நாட்களில் பிச்சிப்பூ விலை ரூ.1000 உயர்ந்தது. இரண்டு நாட்கள் முன்பு கிலோ ஒன்று 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.1200க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல் மலர் சந்தையில் டன் கணக்கில் பூக்கள் தேக்கமடைந்ததால் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு வாடாமல்லி ரூ.120க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.30க்கு விற்கப்படுகிறது. ரூ.150க்கு விற்பனையான செண்டு மல்லி ரூ.20 மட்டுமே. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக பூ விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.