குமரி: கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் கிராம நாட்டுபடகு மீனவர்கள் கடல்சார் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையில் போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழ்நாட்டின் நிலப்பரப்பு வளங்களையும், கடல் வளங்களையும் தனியாருக்கு கொடுக்கும் திட்டத்தின் மூலமாக அந்த வளங்களை அழிக்கும் முயற்ச்சியில் ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்கு நிலம் சார்ந்த பகுதிகளில் வசித்துவரும் விவசாயிகளும், கடல்சார்ந்து வசித்துவரும் மீனவர்களும், கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றர்.
இதனிடையே குமரி மாவட்டம் ஆழ்கடல் பகுதிகளில் இயற்கை எரிவாயு திட்டம் கொண்டுவருதல், கடலில் காற்றாலை திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆபத்தான அழிவைத்தரும் திட்டத்தை கொண்டுவரும் முயற்ச்சியில் ஒன்றிய அரசு தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதேபோல் கடல் விபத்தினால் கடல்வளமும் அழிவுக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது. தொடர்ந்து கடலுக்குள் கனிம மண் அள்ளும் திட்டத்தையும் ஒன்றிய அரசு செயல்படுத்த முயற்ச்சிகிறது.
இதனை கண்டித்து இன்று கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் கிராம மக்கள் தங்கள் நாட்டுப்படகுகளை கரையில் நிறுத்தி, கருப்புகொடி கட்டி போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சின்ன முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த மக்களும் கடற்கரை பகுதியில் போராட்டம் நடத்திவருகின்றனர்.