கன்னியாகுமரி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. ஜூலை 24, 28 தேதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படாது!!
கன்னியாகுமரி: உள்ளூர் விடுமுறை தொடர்பாக கன்னியாகுமரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகுமனி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்படாது.
சில தளர்வுகளின் அடிப்படையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 9ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் அவசரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் தேவையான பணியாளர்களுடன் ஜூலை 24ம் தேதி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழாவையொட்டி ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக.9ம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


