கர்நாடகா: ரசிகரை அடித்துக் கொன்ற வழக்கில் சிறையில் உள்ள கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ரேணுகா சாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா கடந்த ஜூன் 11-ல் கைது செய்யப்பட்டார். நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் மீது பெங்களூரு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 3,991 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பெங்களூரு கீழமை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.