சென்னை: கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். கன்னட மொழி வளமையான பாரம்பரியத்தை கொண்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை குறிக்கும் வகையிலேயே பேசினேன். தமிழைபோலவே கன்னடமும் இலக்கிய வளம், கலாச்சாரம் நிறைந்தது என்பதை நீண்டகாலமாகவே உணர்ந்திருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை: கமல்ஹாசன் விளக்கம்
0