கோவை: கோவையில் பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆபரேசன் சிந்தூருக்கு பின்பு பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை வெளிநாடுகளுக்கு பகிர கட்சி, மதம், ஜாதி பார்க்காமல் எம்.பி.க்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் கனிமொழி எம்.பி. உட்பட அனைவரும் சிறப்பாக பணிகளை செய்தனர். மிக அழகாக கனிமொழி இந்த நாட்டின் மொழி குறித்த கேள்விக்கு, வேற்றுமையில் ஒற்றுமை என்று சொன்னார். அழகாக, நேர்த்தியாக, முதிர்ச்சியாக வேற்றுமையில் ஒற்றுமை என பேசி இருக்கிறார்’ என்றார்.
கனிமொழிக்கு பாஜ பாராட்டு
0