Saturday, February 24, 2024
Home » கனிமொழி எம்பி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை முதல் சுற்றுப்பயணம்: தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரிடம் கருத்து கேட்கிறது

கனிமொழி எம்பி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை முதல் சுற்றுப்பயணம்: தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரிடம் கருத்து கேட்கிறது

by MuthuKumar

சென்னை: கனிமொழி எம்பி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இக்குழு தமிழகம் முழுவதும் சென்று அனைத்து தரப்பினரிடம் கருத்து கேட்கிறது.
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் திமுகவில் தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என்று 3 குழுக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். தொகுதி பங்கீட்டு குழுவினர் கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் தொகுதி வாரியாக அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து கருத்து கேட்டு வருகின்றனர்.

திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் திமுக தலைமை கழக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்துப்பாதுகாப்பு குழு செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி, மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.எழிலரன் எம்எல்ஏ, அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்பி, மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த குழுவினர் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரையின்படி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துகளை பெற உள்ளனர்.
அதன்படி, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, நாளை (5ம் தேதி) தூத்துக்குடிக்கு செல்கிறது. கனிமொழி எம்பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடியில் பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்கின்றனர்.

தொடர்ந்து இந்த குழுவினர் 6ம் தேதி கன்னியாகுமரி, 7ம் தேதி மதுரை, 8ம் தேதி தஞ்சாவூர், 9ம் தேதி சேலம், 10ம் தேதி கோவை, 11ம் தேதி திருப்பூர், 16ம் தேதி ஓசூர், 17ம் தேதி வேலூர், 18ம் தேதி ஆரணி, 20ம் தேதி விழுப்புரம், 21,22,23 ஆகிய தேதிகளில் சென்னை, ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பு மக்களின் கருத்துகள் அடிப்படையில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

one × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi