டெல்லி : பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 7 மாதங்களாகியும் காப்பீட்டு தொகையை தரவில்லை என திமுக எம்.பி. கனிமொழி புகார் தெரிவித்துள்ளார். பயிர்க் காப்பீட்டு திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டுமென்றும் மக்களவையில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார். 2023 டிசம்பரில் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பயிர்கள் சேதமடைந்தன என்றும் எனினும் பயிர்க் காப்பீடு செய்த தூத்துக்குடி விவசாயிகளுக்கு 7 மாதங்களாகியும் இதுவரை இழப்பீட்டு தொகை வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.