திருப்பூர்: காங்கேயத்தில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.94 கோடி மதிப்புள்ள 4.86 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 4.86 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் 6 பேர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாக புகார் எழுந்தது. ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலத்தை மீட்க கடந்த ஜன.22ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ரூ.1.94 கோடி மதிப்புள்ள 4.86 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
காங்கேயத்தில் ரூ.1.94 கோடி கோயில் நிலம் மீட்பு..!!
0
previous post