காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம், திரு.வி.க நகரை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி பழனியம்மாள் (126). இவருக்கு 12 மகன்கள். இதில் 11 மகன்கள் வயது முதிர்வால் இறந்துவிட, மாரிமுத்து (85) என்பவர் மட்டும் தற்போது உள்ளார். இவர்கள் குடும்பத்தில் பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி என தற்போது 152 பேர் உள்ளதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் காங்கயம் பகுதியில் மூத்த வயதுடையதாக கருதப்படும் பாட்டி பழனியம்மாள் 126 வயதில் நேற்று வயது மூப்பால் உயிரிழந்தார். பழனியம்மாள் தனது 13-வது வயதில் மேட்டூர் அணை கட்ட கூலி வேலைக்கு சென்றதாகவும், அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இவருக்கு தாரை, தப்பட்டை, பிளக்ஸ் பேனர்கள் வைத்தும், அலங்கார தேர் செய்தும் உறவினர்கள் சோகத்துடன் இறுதிச்சடங்குகளை நடத்தினர்.
காங்கயத்தில் 126 வயது மூதாட்டி மரணம்
55