டெல்லி: கங்கனா ரணாவத் எம்.பி. கருத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என பாஜக விளக்கம் அளித்துள்ளது. கட்சி கொள்கை சார்ந்த விவகாரங்களில் கருத்துகளை வெளியிட அதிகாரம் வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளை வெளியிடக் கூடாதென்று கங்கனாவிற்கு பாஜக சார்பில் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் ஒன்றிய அரசு வலுவான நடவடிக்கை எடுத்ததாகவும், ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வங்கதேச சூழல் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் என கங்கனா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.