சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கோயிலுக்கு செயல் அறங்காவலர் நியமிக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகளே செயல் அறங்காவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். அத்திவரதர் தரிசன நிகழ்ச்சியின்போது பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். விதிமுறைகேடு குறித்து மத்திய கணக்கு தணிக்கு குழு மூலம் தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.