காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில், முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் (22.8.2024ம் தேதி) நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே, முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களை சார்ந்தோர்கள் தங்களின் அடையாள அட்டையுடன் பெருமளவில் கலந்துகொண்டு தங்களின் மனுக்களை இரட்டை பிரதிகளில் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக வழங்கி பயன்பெறலாம்.