Wednesday, April 17, 2024
Home » காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொது கூட்டம்: மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ அறிவிப்பு

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொது கூட்டம்: மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ அறிவிப்பு

by Ranjith

காஞ்சிபுரம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, பொதுகூட்டங்கள் நடக்க உள்ளதாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க தொடர் பொதுக்கூட்டங்கள் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் மாநகரம், நகரம், ஒன்றியம், பகுதி, பேரூர் வாரியாக கீழ்க்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

தலைமை கழக பேச்சாளர்கள் விவரம்: 16.2.2024ம் தேதி வாலாஜாபாத் தெற்கு- கோவி.செழியன், காஞ்சிபுரம் மாநகரம் பகுதி-1, – தஞ்சை கலைமணி பாரதி, காஞ்சிபுரம் வடக்கு 17ம் தேதி ஆரணி மாலா, வாலாஜாபாத் வடக்கு சேலம் சுஜாதா, வண்ணை புகாரி, இடைக்கழிநாடு பேரூர்-பொன்னேரி சிவா, நாத்திகம் நாகராஜன்,18ம் தேதி திருக்கழுக்குன்றம் தெற்கு தக்கோலம் தேவநாதன், 19ம் தேதி லத்தூர் வடக்கு நெல்லிக்குப்பம் புகழேந்தி, கலைச்செல்வி ஜெகநாதன், மதுராந்தகம் தெற்கு- கவிஞர் நன்மாறன், 20ம் தேதி சித்தாமூர் மேற்கு கருர் முரளி, அச்சரப்பாக்கம் தெற்கு – போடி காமராஜ், 21ம் தேதி மதுராந்தகம் வடக்கு பவானிகண்ணன், லத்தூர் தெற்கு- எழும்பூர்கோபி,

சைதை சாதிக், 22ம் தேதி-காஞ்சிபுரம் மாநகரம்-பொற்கோ கருணாநிதி, காஞ்சிபுரம் தெற்கு-ஈரோடு இளையவேல், 25ம் தேதி தேதி மதுராந்தகம் நகரம்- ஈரோடு இறைவன், அச்சரப்பாக்கம் வடக்கு- பசும்பொன் ரவிச்சந்திரன், 26ம் தேதி காஞ்சிபுரம் மாநகரம் பகுதி 2- முரசொலி முர்த்தி, விஷார் தமிழரசன், காஞ்சிபுரம் பகுதி 3-அரூர் மணிவண்ணன், 27ம் தேதி-உத்திரமேரூர் ஒன்றியம்- திண்டுக்கல் லியோனி, 28ம் தேதி-சாலவாக்கம் ஒன்றியம்- ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

எனவே, சம்பந்தப்பட்ட மாநகரம், நகரம், ஒன்றியம், பகுதி. பேரூர் செயலாளர்கள் இக்கூட்டத்திற்கான அழைப்பிதழை முறையாக அச்சிட்டு அந்த அந்தப் பகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் இயக்க தோழர்கள் அனைவருக்கும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். மேலும், கூட்ட மேடையிலேயே ஏழை – எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கி, கூட்டத்தை சிறப்பான முறையில் எழுச்சியோடு ஏற்பாடு செய்திட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

19 − nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi