சென்னை: காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் இ.வளையாபதி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் பெண் இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் இ.வளையாபதி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். காஞ்சிபுரம் புறநகர் மாவட்ட செயலாளர் ஜி.கருணாகரன் காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகரச் செயலாளர்களுடன் இணைந்து தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.