காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் தலைமை தாங்கி, காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பி.எம்.பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, ராணி அண்ணாதுரை மேல்நிலைப்பள்ளி, திருப்புக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி, முசரவாக்கம், புள்ளளூர், ஈஞ்சம்பாக்கம் ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 2803 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.
இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மண்டல தலைவர்கள் கே.சந்துரு, செவிலிமேடு மோகன், சசிகலா கணேஷ், மாவட்ட பொருளாளர் சன்பிரான்ட் ஆறுமுகம், பகுதி செயலாளர் திலகர், வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், படுநெல்லி பாபு, மாணவ, மாணவிகள், தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.