மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், மதுராந்தகம் நகரில் ‘இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், துணை அமைப்பாளர்கள் மணி, பால்ராஜ், யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை அமைப்பாளர் ஆண்டோ சிரில்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.
இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபு கஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஏராளமான இளைஞர்கள் வாக்காளர் அடையாள அட்டை, தொலைபேசி எண் ஆகியவற்றை வழங்கி உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் குமார், நகர மன்ற தலைவர் மலர்விழி குமார், துணை தலைவர் சிவலிங்கம், சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாவட்ட அமைப்பாளர் நூருல் அமீன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சரளா தனசேகரன், நகர துணை செயலாளர் பரணி, மாவட்ட பிரதிநிதி ராஜா உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் பழமுத்தூர் கிராமம், கருங்குழி பேரூராட்சியில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில், ஒன்றிய செயலாளர் சத்யசாய், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துர்கேஷ், கருங்குழி பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி தலைவர் தசரதன், துணை தலைவர் சங்கீதா சங்கர், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.