காஞ்சிபுரம்: டி.டி.எஃப். வாசன் நவ.29-ம் தேதி பதிலளிக்க காஞ்சிபுரம் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். டி.டி.எஃப். வாசனின் யூடியூப் சேனலை முடக்க காவல்துறை சார்பில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். காவல்துறை தாக்கல் செய்த மனு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டு நீதிமன்றத்தில் டி.டி.எஃப். வாசன் ஆஜரானார். காவல்துறை தாக்கல் செய்த மனு தொடர்பாக டி.டி.எஃப்.வாசன் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விபத்தில் சிக்கிய வாகனத்தை திரும்ப தரக் கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனு நவ.26-க்கு ஒத்திவைக்கப்பட்டது.