
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில், கணிப்பொறி அறிவியல் துறையின் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஏனாத்துரில் செயல்படும் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கணிப்பொறி அறிவியல் துறையின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் இராம.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவ் கல்லூரி முதல்வர் எஸ்.சந்தோஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2018 முதல் 2021 வரை படித்து தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளில், பல்கலைக்கழகத்தில் தரவரிசையில் ஒன்று முதல் பத்து நிலை ரேங்க், பதக்கங்களை பெற்ற 11 முதுநிலை பட்டதாரிகள் மற்றும் 20 இளநிலை பட்டதாரிகள் உள்ளிட்ட 650 பட்டதாரிகளுக்கு, பதக்கங்கள் மற்றும் பட்டமளிப்பு சான்றிதழ்களை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சிவக்குமார், கணினி அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.