Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

காஞ்சிபுரம், ஜூலை 10: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாளை நடைபெறவுள்ளது என்று கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை காஞ்சிபுரம் வட்டத்தில் களியனூர், உத்திரமேரூர் வட்டத்தில் அரசாணிமங்கலம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ளாவூர், பெரும்புதூர் வட்டத்தில் குண்ணம், குன்றத்தூர் வட்டத்தில் காவனூர் ஆகிய கிராமங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன.

மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள், தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை நியாயவிலைக் கடைக்கு பொருள் பெற நேரில் செல்ல இயலாத முதியோர், மாற்றுத்திறனாளிகள் அங்கீகாரச்சான்று மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த, அரிய வாய்ப்பினை மேற்படி கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.