மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மதுராந்தகம் அடுத்த மாமண்டூரில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் இனிய அரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் செல்வம் எம்பி, கோகுலக்கண்ணன், மலர்விழி குமார், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ அனைவரையும் வரவேற்று பேசினார். இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் சுபேர்கான், பச்சையப்பன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், பாஸ்கர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு, வரும் நவம்பர் 5ம் தேதி திருவள்ளூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்தும், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், நீட் விலக்கு நம் விலக்கு என்னும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுப்பது குறித்தும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், செயற்குழு உறுப்பினர்கள் நாகன், நாராயணன், சுகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, சசிகுமார், ராஜேந்திரன், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் குமார், ஞானசேகரன், சாலவாக்கம் குமார், சேகர், குமணன், கண்ணன், தம்பு, சத்திய சாய், சிவக்குமார், ராமச்சந்திரன், ஏழுமலை, சரவணன், சிற்றரசு, பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாணவரணி அமைப்பாளர் டைகர் குணா, பேரூர் செயலாளர்கள் பாரிவள்ளல், பாண்டியன், எழிலரசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மாலதி, சிtறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் நூர்ல் அமித், மீனவரணி அமைப்பாளர் பாரத், அயலக அணி துணை அமைப்பாளர் சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.