Wednesday, April 17, 2024
Home » பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மகன், மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்த காஞ்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்: குவியும் பாராட்டுகள்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மகன், மகளை மாநகராட்சி பள்ளியில் சேர்த்த காஞ்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்: குவியும் பாராட்டுகள்

by Ranjith

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி, தும்பவனம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தனது மகள் மற்றும் மகனை சேர்த்து, பூரிப்புடன் வீடு திரும்பினார். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் கேட்டாட்சியராக அண்மையில் கலைவாணி பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது, பிள்ளைகளை காஞ்சிபுரம் அரசு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார்.

அதன்படி, நேற்று காலை காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே தும்பவனம் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு வந்த கோட்டாட்சியர் கலைவாணி, மகள் பிராத்தனாவை 3ம் வகுப்பும், மகன் சாய் பிரணவ்வை 1ம் வகுப்பிலும் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து, பள்ளி தலைமை ஆசிரியர் மலர்கொடியிடம் வழங்கினார். பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்த மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார். இந்த காலத்தில் சிபிஎஸ்இ, கான்வென்ட் என தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர் மத்தியில், ஒரு அரசு உயர் அதிகாரி, தனது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அரசு பள்ளியில் படித்த அப்துல்கலாம் முதல் தற்போது, பெரிய பதவிகளில் உள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும், அரசு பள்ளியில் படித்து தான் வெற்றியாளராக வலம் வந்துள்ளனர். அந்த வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தனது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்த காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணிக்கு, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் வெற்றி செல்வி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நளினி, வட்டார கல்வி அலுவலர் கண்ணன், திமுக மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

three + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi