காஞ்சிபுரம்: மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் உண்டியல்கள் கடந்த 20.6.2024ம் தேதிக்கு பிறகு, மீண்டும் நேற்று திறந்து எண்ணப்பட்டன. கோயிலில், இருந்த 2 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த தொகை ₹83 லட்சத்து 72 ஆயிரத்து 350 ரூபாயும், தங்கம் 325 கிராமும், வெள்ளி 1225.509 கிராமும் இருந்தன. கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், கோயில் காரியம் சுந்தரேசன், கோயில் மணியக்காரர் சூரிய நாராயணன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்களை கோயில் பணியாளர்கள் திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.