Friday, March 1, 2024
Home » காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு நிவாரணம்: அமைச்சர் முத்துசாமி வழங்கி ஆறுதல்

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு நிவாரணம்: அமைச்சர் முத்துசாமி வழங்கி ஆறுதல்

by Neethimaan


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ராணி அண்ணா துரை பள்ளியில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதிக்கு வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று மோட்டார் இயந்திரங்கள் கொண்டு மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்,பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைக்கும் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர், செவிலிமேடு மேட்டு காலணி பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக 4 வீடுகள் பெரிதும் சேதமடைந்தது. இதனை அறிந்த அமைச்சர் முத்துசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து உதவி தொகை மற்றும் போர்வை, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வழங்கினார். மேலும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடைபெற்று வரும் மருத்துவ முகாமினையும் பார்வையிட்டு, பொதுமக்களிடம் நலம் விசாரித்து உணவு பொருட்களையும் வழங்கி மருத்துவர்களிடம் பொதுமக்களின் நலன் குறித்து கேட்டறிந்தார். மழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியவுடன் விடுமுறை தினமான மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த விளையாட்டு வீரர்களுக்கு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி மகிழ்வித்தார்.

இந்த ஆய்வின் போது, எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மண்டல குழு தலைவர்கள் செவிலிமேடு மோகன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், பகுதி செயலாளர்கள் திலகர், வெங்கடேசன், சந்துரு, மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

15 − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi