சேலம்: ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜின் சகோதரர் தனபால் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காவலரை தரக்குறைவாக பேசிய புகாரில் கனகராஜின் அண்ணன் தனபாலை போலீசார் கைதுசெய்தனர். தாரமங்கலம் – நங்கவள்ளி சாலையில் காவல் உதவி ஆய்வாளர் அழகுதுரை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அவ்வழியே வந்த தனபால், காவல் உதவி ஆய்வாளர் அழகுதுரையிடம் வாக்குவாதம் செய்ததாக தகவல் வெளியாகியது.
தரக்குறைவாக பேசியதோடு, காவலரின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டதாக புகார் தெரிவிக்கபப்ட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் அழகுதுரை கொடுத்த புகாரின் பேரில் தனபாலை போலீசார் கைது செய்தனர். 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தனபாலை, போலீசார் சிறையில் அடைத்தனர்.