புழல்: செங்குன்றம் வட்டார நாடார் இளைஞர் அணி சார்பில் காமராஜர் இலவச கண் மருத்துவமனை காமராஜர் முழு உருவ வெண்கல சிலை புதுப்பிக்கப்பட்ட காமராஜர் இலவச ரத்த பரிசோதனை மையம் ஆகிய முப்பெரும் விழா செங்குன்றத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு இளைஞர் அணி தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் ராஜேஷ் செல்வகுமார் செல்வம் சதீஷ்குமார் பொண்ணு வேல் ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வைத்தனர். முழு உருவ காமராஜர் சிலை இலவச கண் மருத்துவமனை இலவச ரத்த பரிசோதனை மையம் ஆகியவை பெரியோர்களால் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள், அனைத்து சமுதாய தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சுந்தரமூர்த்தி நன்றி உரையாற்றினார்.