சென்னை: காமராஜர் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: விடுதலை இந்தியாவில் தொடக்க கல்விக்கான மிக வலிமையான அடித்தளத்தை தமிழ்நாட்டில் அமைத்த முன்னோடி முதலமைச்சரும், மிகச் சிறந்த காந்திய பற்றாளருமான காமராஜர் நினைவுநாளில் விடுதலை போராட்ட வீரராகவும் அரசியல் தலைவருமாக அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.