பஞ்சாப்: சமூக ஊடக பிரபலமான கமல் கவுர் என்ற பெண் பஞ்சாப் மாநிலம் பதிண்டா அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். பதிண்டாவில் உள்ள ஆதேஷ் மருத்துவப் பல்கலை. அருகே காரில் இருந்து தூர்நாற்றம் வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரையடுத்து விரைந்து வந்த போலீஸ் காரை திறந்த பார்த்தபோது கமல் கவுர் சடலம் என தெரியவந்தது. பதிண்டாவில் தனியார் பல்கலைக்கழகம் அருகே நிறுத்தியிருந்த காரில் கமல் கவுர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ரீல்ஸ், குறும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பிரபலமான கமல் கவுர் உயிரிழந்ததால் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமூக ஊடக பிரபலமான கமல் கவுர் என்ற பெண் பஞ்சாப் மாநிலம் பதிண்டா அருகே மர்மமாக உயிரிழப்பு
0