தேவையானவை:
வறுத்த கொள்ளு – 200 கிராம் (6 மணி நேரம் ஊறவைக்கவும்),
கோஸ், கேரட், பீன்ஸ், முள்ளங்கி தலா – 75 கிராம் (துருவியது),
உருளைக்கிழங்கு – 150 கிராம் (வேகவைத்தது),
இஞ்சி – சிறு துண்டு,
பச்சைமிளகாய் – 6, மசாலா தூள் – 1 ஸ்பூன்,
உப்பு – சுவைக்கு,
எண்ணெய் – 200 கிராம்,
அரிசி மாவு – 50 கிராம்.
செய்முறை:
கொள்ளை இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி, பின்பு துருவிய காய்கறி கலவையை ேசர்த்து வதக்கி, தோல் உரித்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து அதனுடன் மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். அதனை அரைத்த கொள்ளுடன் கலந்து சிறு சிறு கட்லெட்டுகளாக தட்டி தவாவில் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். எண்ணெயில் பொரிப்பதாக இருந்தால் அரிசி மாவில் பிரட்டி பின்பு பொரித்தால் உடையாமல் மொறுமொறுப்பாக வரும்.