சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளர் மாணவர் விடுதிகளை பராமரிக்க முடியவில்லை என்ற கண்துடைப்பு காரணத்தைக் கூறி, 2022ம் ஆண்டு கள்ளர் மாணவர் விடுதிகளை, பள்ளி கல்வி துறையுடன் இணைக்க முயற்சி மேற்கொண்டபோது, கள்ளர் சமுதாய மக்களின் கடும் எதிர்ப்பிற்கு பிறகு இம்முயற்சி அரசின் தொடர் பரிசீலனையில் இருப்பதாக தெரிய வருகிறது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் நிர்வாகத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிடில் பாதிப்புக்குள்ளாகிய கள்ளர் சமுதாய மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.