சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளின் நிர்வாகத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையிடம் இருந்து பறித்து, பள்ளி கல்வி துறைக்கு மாற்ற முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களின் சார்பில் வருகிற 24ம் தேதி (சனி) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மதுரை மாவட்டம், செக்கானூரணி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.