சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட அறிக்கை: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் (கள்ளர்சீரமைப்பு) உயர்நிலைப் மற்றும் மேனிலைப் பள்ளிகளுக்கு சிறப்பு கட்டண இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 2025-2026ம் கல்வி ஆண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் மொத்தம் ரூ.17 கோடியே 77 லட்சத்து 84 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளுக்கு(மதுரை, தேனி, திண்டுக்கல்) மாவட்டங்களில் செயல்படும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உள்பட ரூ.16 கோடியே 38 லட்சத்து 8 ஆயிரத்து 846 தொகையை 38 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து ஆணையிடப்படுகிறது. இதன்படி, முதன்மைக் கல்வி அலுவலர்கள் 2025-2026ம் கல்வி ஆண்டுக்கு அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை பள்ளிகளுக்கு அந்தந்த கணக்கில் வழங்கப்பட வேண்டிய பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். மேலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு கட்டணம் கூடுதல் தேவை இருப்பின் வகுப்பு வாரியாகவும் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பாடப்பிரிவு வாரியாகவும் எண்ணிக்கை விவரத்துடன் உரிய படிவத்தில் தயார் செய்து பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும், உள்ளாட்சி நிறுவனப் பள்ளிகளுக்கு சிறப்பு கட்டண இழப்பீட்டுத் தொகை அனுமதிக்க கூடாது.
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ரூ.16.38 கோடி சிறப்பு கட்டணம் ஒதுக்கி உத்தரவு
0