கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் 68 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த கெமிக்கல் கம்பெனி உரிமையாளர் பன்சிலால் (40), புதுவை மடுகரையை சேர்ந்த ஷாகுல்ஹமீது (60), சங்கராபுரம் அருகில் உள்ள சேஷசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி சின்னதுரை (40), அதே ஊரை சேர்ந்த சாராய வியாபாரி கதிரவன் (35) ஆகிய 4 பேரை சென்னை சிபிசிஐடி எஸ்.பி. வினோத்சாந்தாராம் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் மேலும் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
previous post