கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 229 பேர். இதில் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம், புதுவை ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி 67 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 20 பேரில் 10 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருணாபுரத்தை சேர்ந்த மோகன் (55) என்பவர் நேற்று உயிரிழந்தார். அதனையடுத்து பலி எண்ணிக்கை 68ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மருத்துவமனையில் சிகிச்சையில் குணமடைந்து ஏற்கனவே 161 பேர் நலமுடன் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.