சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப் பேரவையின் இன்றைய அலுவல்கள் முடிந்தவுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். மூத்த அமைச்சர்கள், டிஜிபி, உளவுத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார். அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.