கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் கைதான மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஷாகுல் ஹமீது, பென்சிலால், கதிரவன், சின்னதுரை ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கெனவே மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை, ஜோசப் ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். விஷ சாராய சம்பவத்தில் கைதானோரில் 8 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிபிசிஐடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விஷ சாராய வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.