கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூரில் முதிய தம்பதியை மிரட்டி அடித்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கடுவனூர் கிராமத்தில் கேசரி வர்மன் என்பவர் வீட்டில் நுழைந்து மர்ம நபர்கள் கைவரிசையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கேசரி வர்மன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தாய் பொன்னம்மாள், தந்தை முனியனை தாக்கி இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியுடன் கேசரி வர்மன் என்பவர் வெளியூர் சென்ற நிலையில் வீட்டில் இருந்தோரை கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையத்துள்ளனர். மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடப்பதால் வீட்டில் தங்க நகைகளை கேசரி வர்மன் வைத்துள்ளார். பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்து முதிய தம்பதியை 2 கொள்ளையர்கள் தாக்கியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளநிலையில், வீட்டில் இருந்த200 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.