கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்பட்ட குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கபட்டது. சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தின்பண்டங்கள், கலப்பட டீ தூள் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் சுகாதாரமற்ற பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.