பம்மல்: திரிசூலம், லட்சுமணன் நகரை சேர்ந்தவர் பாக்யராஜ். இவரது மகன் தனசேகரன் (23), அதே பகுதியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகாத இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த சில பெண்களிடம் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணமான பெண்களிடம், யாரும் இல்லாத நேரத்தில், அவர்களின் வீடுகளுக்கே சென்று உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள தனது கள்ளக்காதலி ஒருவரிடம் உல்லாசம் அனுபவிப்பதற்காக, அவரது வீட்டு மாடிக்கு ரகசியமாக சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பி மீது தனசேகரன் கை உரசியதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், தனசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.