கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த வி.மாமந்தூர் கிராமத்தில் வெறிநாய் கடித்து சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்துள்ளனர். காலைக்கடன் முடிப்பதற்காக ஏரிகரை சென்ற சிறுவர்களை தெருநாய்கள் துரத்தியதாக தகவல் வெளியாகியது. தெருநாய்கள் துரத்துவதை கண்டு ஓட்டம் பிடித்த சிறுவர்கள் உட்பட 15 பேரையும் நாய்கள் கடித்து குதறின. கை, கால், முகம் என பல்வேறு பாகங்களில் காயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெரு நாய்கள் கடித்ததில் காயம் அடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.