உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்தில், ‘’மக்களுடன் முதல்வர்’’ திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், பானுமதி, வட்டாட்சியர் தேன்மொழி, மாவட்ட குழு உறுப்பினர் பத்மாபாபு முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் வளர்மதி சுதாகர் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 13 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணையும் 6 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கடனுதவிக்கான காசோலையும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டைகள், கலைஞரின் மருத்துவ காப்பீடு அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
முகாமில், பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்வின் போது அரசு துறை ரீதியாக அரங்குகள் அமைத்து அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாதுரை, பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.சசிகுமார் கலந்துகொண்டனர்.