
சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் எழுந்த பாலியல் புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் நாளை விசாரணை. கலாஷேத்ரா மாணவிகளின் போராட்டம் குறித்த செய்தி அடிப்படையில் மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணை நடத்த உத்தரவு அளித்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமை ஆணைய விசாரணைக்குழு நாளை நேரில் விசாரணை மேற்கொள்ளவுள்ளது. மனித உரிமை ஆணையத்தின் இயக்குனர் நேரில் விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை அளிக்கவும் ஆணை பிறப்பித்துள்ளார். பேராசிரியர் ஹரி பத்மன் உள்ளிட்ட 4 பேர் மீது மாணவிகள் கூறிய பாலியல் புகார் பற்றி ஏற்கனவே மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது